Written piece
சௌகர்யக் குறைவு/ Inconvenience
Saranya M K S
India
About this piece
Original
இக்கவிதை,பெண்ணின் மரணம் முதல் பிறப்பு வரை பின்னலவிழ்த்து,உலகம் முழுவதும் இச்சமூகத்திற்கும் ஆண்களுக்கும் "சௌகர்யக் குறைவு" என்று பெண்ணை அடிமையாக்கும் பெண் சிசுக்கொலை,பாலியல் கொடுமை,சம்பளக் குறைவு, வரதட்சணை,கட்டாயக் கல்யாணம்,பாதுகாப்பின்மை ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
English translation
The poem unweaves a woman's life from death to birth, bringing to light the oppression of women worldover with female infanticide, sexual harrasement, outlawing unwanted abortion, stopping higher education, denying equal pay at work, partner choice and safety to avoid "inconvenience" to the society and its men.
யாரேனும் தெளிவாகச்
சொல்லுங்கள்
எதுவரை
இருக்க வேண்டும்
ஒரு
பெண்ணின் சுதந்திரம்?
எப்போது சாவது
என்பது வரையா?
இல்லை இல்லை
தேவையான நேரத்தில்
தேவையான இடத்தில்
இல்லாமல் போய்விட்டால்
என்ன செய்வது?
என் பிள்ளையை
வளர்ப்பது எப்படி
என்ற முறையேனும்..
அட
நீ வளர்ந்ததே
நாங்கள்
சொன்னதுபோல் தானே!?
எப்போது
என் உடல் கொண்டு
பிள்ளை பெறுவதென்பது..
எப்போது எவ்வளவு
என்ன பிள்ளை
என்பதெல்லாம்
நாங்களே
சொல்லி விடுகிறோம்
பெற்று வளர்த்தலே
போதாதா உனக்கு?
யாரோடு வாழ்வது
என்பது வரையிலா?
இல்லை இல்லை
சுற்றி இருப்பவர்களுக்கு
சம்மதமோ
சன்மானமோ
இல்லாமல் போய்விட்டால்
என்ன செய்வது?
எங்கே வாழ்வது
என்பது வரையிலோ?
அக்கம் பக்கம்
அவர் இவருக்கு
சற்றேனும்
சௌகர்யமாய் இல்லாவிடில்
என்ன செய்வது?
என்ன வேலைக்கு போவது
என்பது வரையிலே?
அய்யோ!
பிறருக்கு
சம்மதமில்லா வேலையாக
இருந்து விட்டால்?
அங்கே ஆண்களுக்கு
போட்டியாகவோ
அல்லது
ஆணையிடும் இடத்தை பிடித்துவிட்டால்
என்ன செய்வது?
என்ன படிப்பு வரையிலாவது...
அதெப்படி?
அதிகமாக யோசித்து
சம அளவு
மரியாதையும்
உரிமையும் கேட்டால்
என்ன செய்வது?
நினைத்த உடையேனும்?
அட ...
பிறகு
நடக்கும் குற்றங்களுக்கு
யாரைக் குறை சொல்வது?
எங்கு
எப்போது
சென்று வருவதென்பதாவது..
வேண்டவே வேண்டாம்.
ஆண்களுக்கு
சுதந்திரமாய்த் திரியும்
இடங்கள்
குறைந்துவிடும்
அழகு வேறு: தவறுக்கு
அவர்களைத் தூண்டிவிடும்
பாவம் அவர்கள்!
என்ன பேசுவது வரை...
அதெப்படி?
நியாயம் கேட்டுவிட்டால்
பதில் வேறு
சொல்லி நிற்க வேண்டும்
என்னென்ன சாப்பிடுவது என்பதாவது கேட்க?
அய்யய்யோ!
ஆண்களுக்கேற்ற
அழகு இருக்காதே!
யாருக்கு பிறக்க வேண்டும்
என்பதேனும்...
இல்லை இல்லை.
தவறாகப் பெண்பிள்ளைகள்
பிடிக்காதவற்குப்
பிறந்துவிட்டால்
என்ன செய்வது?
கொலைப் பழியே
வந்துவிடும்!
English translation
Somebody clearly do tell
Till what doth a woman’s freedom
Can certainly be?
Till when to die is it?
No no.
What to do if she isn’t there
At a needed place
At a needed time?
Till deciding the ways to bring up my own child maybe?
Uh..
You yourself grew-
The way we had told you to.
Till when I should bear children with my own body!?
We tell you the when,
How many,
And what children.
Giving birth and bringing them up-
Aren't these enough for you?
Till deciding on whom I should
live with?
No no.
What to do if it isn’t conforming to
or unrewarding
for the ones around you?
Till where I live?
What if it is even a little
inconvenient ,
for the ones here and there,
for this person or that?
Till what jobs I go to?
Oh no!
What if it’s not agreeable for the others?
What to do if you become a competition to men?
Or get into a commanding position?
Atleast till what to study!?
How can that be?
What if you think a lot and ask for equal respect and rights?
Atleast the clothing I desire!?
How can it be?
Then whom to blame for all those crimes happening?
Where and when to go and return!?
No need of that at all!
The number of places to hang out freely will decrease for men.
And beauty on the other hand: will instigate them to do wrong things
Poor men.
Till what to talk?
How come? What if you end up asking for justice?
We got to stand there answering you.
Atleast till the extent of asking for the kind of food I have?
Oh heavens!
Then there wouldn’t be beauty suiting men’s wishes!
To decide on to whom we should be born to?
No no.
What if you are born to those who don’t like girl children?
The blame of murder itself will fall upon them!