காமன்வெல்த் சிறுகதை பரிசு, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, இதுவரை வேறெங்கும் வெளிவந்திராத புனைவு சிறுகதைகளுக்கு (2000-5000 வார்த்தைகள்) வழங்கப்படுகிறது. வேறு மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகளும் போட்டிக்கு தகுதிபெறும். ஒவ்வொரு வருடமும் வெற்றி பெறும் ஐந்து போட்டியாளர்கள் வெவ்வேறு ஐந்து காமன்வெல்த் பிராந்தியங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் £2500 வழங்கப்படுவதுடன் அவர்களில் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர் ஒருவருக்கு £5000 வழங்கப்படும். பரிசுபெறும் சிறுகதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டதாக இருந்தால், அதன் மொழிபெயர்ப்பாளருக்கும் கூடுதல் அளவு பரிசு தொகை வழங்கப்படும்.
போட்டியில் பங்குபெற அனுமதி இலவசம். தமிழில் கதை எழுதுபவர்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லையென்றாலும், தமிழிலேயே தங்கள் கதைகளை அனுப்பலாம். தேர்வு விதிகளின் ஓர் அங்கமாக, அக்கதைகள் அனுபவமுள்ள தமிழ் வாசகர்களால் வாசிக்கப்பெறும். இந்த முதல் நிலையை வெற்றிகரமாகக் கடக்கும் கதைகள், சர்வதேச தேர்வுக்குழுவினர் வாசிப்பிற்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்.
ஆன்லைனில் உங்கள் கதைகளை விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.
[button link=”https://www.commonwealthwriters.org/submit-an-entry/”]இங்கே நுழையவும்[/button]
மேலும் விபரங்களுக்கு email:writers@commonwealth.int-இல் தொடர்புகொள்ளவும்.